அமீரக செய்திகள்

அமீரக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இன்று காலை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக NCM தெரிவிப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று காலை மழைப்பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் காரணமாக, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேக விதைப்பு முயற்சியால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பகலில் வெப்பமாகவும், ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் எனது கூறப்பட்டுள்ளது. மேலும் சில சமயங்களில் மழை வெப்பச்சலன மேகங்கள் கிழக்கு நோக்கியும், பிற்பகலில் சில உள் பகுதி நோக்கியும் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில சமயங்களில் தூசி நிறைந்த லேசான முதல் மிதமான காற்று வீசுக்கூடும் என்றும் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் நீர் மட்டம் குறைவாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!