அமீரக செய்திகள்

மீலாது நபி விடுமுறை: துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து சேவை நேரங்களை அறிவித்துள்ள RTA..!!

அமீரகத்தில் வியாழக்கிழமை மீலாது நபிக்கான பொது விடுமுறையை முன்னிட்டு துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்து சேவைகளின் நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோ, டிராம்

துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன் ஆகிய இரண்டும் காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும். துபாய் டிராம் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை சேவையில் இருக்கும்.

பேருந்து சேவைகள்

துபாய் மற்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து எக்ஸ்போ 2020 இலவச பேருந்து சேவை வழக்கம் போல் செயல்படும்.

பொது பேருந்துகளின் அட்டவணை பின்வருமாறு:

கோல்ட் சூக் ஸ்டேஷன் உட்பட முக்கிய நிலையங்கள், அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 1.22 வரை மற்றும் அல்-குபைபா நிலையம் அதிகாலை 4.13 முதல் நள்ளிரவு 12.57 வரை இயங்கும்.

சத்வா நிலையம் உட்பட துணை நிலையங்கள், அதிகாலை 4.57 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். ரூட் C01 24 மணி நேரமும் செயல்படும்.

அல்-குசைஸ் பேருந்து நிலையம் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.04 வரை, அல் கூஸ் தொழிற்துறை நிலையம் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை, மற்றும் ஜபெல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12.15 வரை செயல்படும்.

சென்டர் பாயிண்ட், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், இப்னு பட்டுடா, துபாய் மால்/புர்ஜ் கலீஃபா, அபு ஹைல் மற்றும் எடிசலாட் ஆகிய இடங்களில் மெட்ரோ இணைப்பு பேருந்து சேவை விடுமுறையின் போது அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.15 வரை இயங்கும்.

நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவை

நகரங்களுக்கு இடையேயான இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் பின்வருமாறு இயங்கும்.

அல் குபைபா போன்ற துணை நிலையங்கள் காலை 6.40 முதல் இரவு 10.20 வரை, யூனியன் ஸ்கொயர் அதிகாலை 4.25 முதல் நள்ளிரவு 12.15 வரை, எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, அபு ஹெயில் மெட்ரோ நிலையம் காலை 6.30 முதல் இரவு 10.35 வரை, மற்றும் ஹத்தா நிலையம் காலை 5.30 முதல் இரவு 9.30 வரை இயங்கும்.

வெளிப்புற நிலையங்களின் நேரம் பின்வருமாறு: ஷார்ஜாவில் அல் ஜுபைல் நிலையம் காலை 5.30 மணி முதல் 11.15 மணி வரை மற்றும் அஜ்மான் நிலையம் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!