அமீரக செய்திகள்

UAE: இனி டிரைவிங் லைசென்ஸிற்கான தியரி டெஸ்ட்டினை ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம்..!! ஷார்ஜாவில் வந்துள்ள புதிய நடைமுறை..!!

வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஷார்ஜா காவல்துறை ஜெனரல் கமாண்ட், வாடிக்கையாளர் மகிழ்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கான முன்னோடி சேவைகளின் வரம்பில் டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களுக்கு ‘ஸ்மார்ட் தியரி டெஸ்ட்’ சேவையை இணைத்துள்ளது.

ஷார்ஜா காவல்துறையின் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறையின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் ரஷித் அஹ்மத் அல் ஃபர்தான், சமீபத்தில் இணைக்கப்பட்ட இந்த சேவையானது நாட்டிலுள்ள லைசென்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளின் இதுபோன்ற முதல் சேவையாகும் என்று தெரிவித்துள்ளார்.

டிரைவிங் லைசென்ஸ்களுக்கான தியரி டைஸ்டிற்கி உட்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் அல்லது ஓட்டுநர் நிறுவனங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமின்றி, எங்கிருந்தும் ஆன்லைனில் சோதனையை மேற்கொள்ள இந்தச் சேவை அனுமதிக்கிறது.

லெப்டினன்ட் கர்னல் அல் ஃபர்தான் மேலும் கூறுகையில், இந்த சேவையை ஆன்லைனில் வழங்குவது வாடிக்கையாளர்களின் சேவை மையங்களுக்கு வருவதை குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். அத்துடன் ஷார்ஜா காவல்துறையின் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதற்கும் இது தொடர்ச்சியான ஆர்வத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் ஷார்ஜா டிரைவிங் இன்ஸ்டிடியூட் இணையதளத்தை அணுக வேண்டும் என்று லெப்டினன்ட் கர்னல் அல் ஃபர்தான் விளக்கியுள்ளார்.

பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்னர், நிறுவனம் அனுப்பிய இணைப்பைப் பெற்ற பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமராவைச் செயல்படுத்துவதன் மூலம் ஆன்லைனில் தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து இந்த தேர்வை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்த பிறகு, விண்ணப்பதாரரின் செயல்திறனைப் பொறுத்து, SMS மூலமாகவோ அல்லது விண்ணப்பதாரரின் ஈமெயில் மூலமாகவோ பாஸ் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!