அமீரக செய்திகள்

UAE: “மக்களின் அதிபர்” ஷேக் முகம்மது.. ஊழியர்களிடம் சாதாரணமாக சிரித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் மூன்று அமீரக ஊழியர்களுடன் சாதாரணமாக  சிரித்துப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த திங்கள்கிழமை ஷேக் முகமது அவர்கள் அபுதாபியில் உள்ள பராக்கா அணுமின் நிலையத்திற்கு பார்வையிடச் சென்றிருந்த  போது இந்த மனதைக் கவரும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ காட்சிகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி, அணுமின் நிலையத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களிடம் சாதாரணமாக பேசிக்கொண்டுள்ளார். இந்த மூன்று ஊழியர்களும் பணிச்சீருடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் கருத்துப்படி, அமீரகத்தின் ஜனாதிபதி பொறுப்பில் உள்ள தலைவர் எளிமையாகவும் சகஜமாகவும் பாமர மக்களிடம் உரையாடும் காட்சி இணையத்தில் அனைவரின் மனதையும் வென்றுள்ளது.

இணையவாசிகளின் பதிவின்படி, உயர்பதவியில் இருக்கும் அவர் பணியாளர்களை நெருக்கமாக இழுத்துக்கொண்டு அவர்களின் தோளைத் தட்டி, புன்னகையுடன் பேச்சுக் கொடுக்கும் காட்சிகள் மிக அழகிய தருணங்களாகக் கருதப்பட்டுள்ளது.

மேலும் அதேநாளில், ஷேக் முகமது தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மற்றும் பிற உயர் அரசாங்க அதிகாரிகளுடன் பராக்கா மின் நிலையத்தின் யூனிட் 3 இன் நிறைவைக் கொண்டாடியுள்ளார். உலகெங்கிலும் உள்ள புதிய அணுசக்தி திட்டங்களுக்கு முன்மாதிரியாக இந்த அணுமின் நிலையம்  மாறியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் மற்றும் விஐபிகளைச் சந்திப்பதில் மும்முரமாக இருந்தாலும், அதிபர் ஷேக் முகமது தனது மற்ற விவிஐபிகளை (அமீரக மக்களை)  எப்போதும் மறக்கமாட்டார் என்று இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவுக்கு கருத்துகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!