அமீரக செய்திகள்

ஆறு மதங்களில் 65,000 ஸ்மார்ட் பரிவர்த்தனைகள்.. சாதனை படைத்த துபாய் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்கள்..!!

துபாய் எமிரேட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அதன் 22 ஸ்மார்ட் காவல் நிலையங்களில் இந்தாண்டின் முதல் பாதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் பரிவர்த்தனைகள் குறித்த புள்ளிவிவரங்களை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆறு மாதங்களில், 16,205 அறிக்கைகள் மற்றும் 4,967 குற்றவியல் தொடர்பான விசாரணைகள் உட்பட மொத்தம் 65,942 ஸ்மார்ட் பரிவர்த்தனைகள் எந்த மனித தலையீடும் இல்லாமல் வசதியாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது துபாய் காவல்துறையின் புதிய சாதனையாகும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து லாஜிஸ்டிக் சப்போர்ட் டைரக்டர் ஜெனரல் மற்றும் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் திட்டங்களுக்கான நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் அலி அஹ்மத் கானிம் என்பவர் கூறுகையில், துபாயின் ஸ்மார்ட் போலீஸ் சேவையானது நகரத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஒருங்கிணைந்ததாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இருவரும் புதுமையான மற்றும் வசதியான உயர்மட்ட போலீஸ் சேவைகளை எதிர்பார்க்கின்ற நிலையில், இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும் உயர்ந்த தரத்திலும் சேவைகளை வழங்க துபாய் அரசாங்கத்தின் இலக்குகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இத்திட்டமானது வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் போலீஸ் சேவைகளை வழங்குவதிலும், பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கங்களை அடைய அர்ப்பணிப்பையும் தெளிவாகக் குறிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

துபாய் காவல்துறையின் இந்த ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்களில் அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், ரஷியன் மற்றும் சீனம் ஆகிய ஏழு மொழிகளில் சமூகம் மற்றும் காவல்துறை சார்ந்த சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!