அமீரக செய்திகள்

UAE: 2021 ம் ஆண்டின் பாதுகாப்பான நகரங்களாக அறிவிக்கப்பட்ட அபுதாபி மற்றும் துபாய்..!!

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மக்கள் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான நாடுகளின் நகரங்களை தரக் குறியீட்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். இதனை போன்று பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வரும் எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) நடப்பு ஆண்டு 2021 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நகரங்கள் அட்டவணையை வெளியிட்டுள்ளது.

EIU வெளியிட்டிருக்கும் பாதுகாப்பான நகரங்கள் அட்டவணையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பிற்காக மிக அதிக மதிப்பெண் பெற்று பாதுகாப்பான நகரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என அபுதாபி மீடியா அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

மக்கள் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் முதலீடு செய்வதற்கும் பாதுகாப்பான இடமாக அதன் நிலையை வலுப்படுத்திவரும் அபுதாபி, 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான நகரங்கள் அட்டவணையில் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்திய தரவரிசையில் முன்னிலையில் இருந்து வருகிறது.

இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் தரவு கூட்ட-ஆதார வலைத்தளமான நம்பியோ (Numbeo) மூலம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில், அபுதாபியானது உலகின் பாதுகாப்பான நகரமாக ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து தரவரிசையில் இடம்பிடித்திருந்தது. மக்கள் பாதுகாப்பு குறித்து வழங்கப்படும் வாழ்க்கைத் தரக் குறியீட்டில் 88.46 சதவிகித மதிப்பெண்ணுடன் உலகெங்கிலும் உள்ள 431 நகரங்களை விட அபுதாபி முன்னணியில் உள்ளதாக அந்த கணக்கெடுப்பின் முடிவில் நம்பியோ வலைத்தளம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த உலகின் பாதுகாப்பான நகரங்கள் தரவரிசையில் அமீரகத்தின் மற்ற முக்கிய நகரங்களான துபாய் மற்றும் ஷார்ஜா உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!