அமீரக செய்திகள்

துபாயில் இன்று முதல் மாற்றப்பட்டுள்ள பல பேருந்து வழித்தடங்கள்..!! மக்களின் சுமூகமான பயணத்திற்காக RTA நடவடிக்கை…

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்கும், எமிரேட்டுக்குள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு சுமூகமாக பயணிப்பதற்கும், இன்று (நவம்பர் 20) முதல் எமிரேட்டில் பல பொதுப் பேருந்து வழித்தடங்களை மாற்றுவதாக அறிவித்துள்ளது.

துபாய் RTA வின் இந்த நடவடிக்கைகள் பயணிகளின் தினசரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பேருந்து வழித்தடங்களின் பெயர் மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூட் 11Aக்கு பதிலாக 16A மற்றும் 16B ஆகிய வழித்தடங்கள் செயல்படும். 16A ஆனது, அல் அவிர் பகுதியில் உள்ள ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டவர் விவகாரத் துறையில் (Residency and Foreigners Affairs Department) இருந்து கோல்ட் சூக் பஸ் ஸ்டேஷன் வரை செல்லும். மாறாக, ரூட் 16B கோல்ட் சூக் பஸ் ஸ்டேஷனில் இருந்து அல் அவிர் பகுதியில் உள்ள ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டவர் விவகாரத் துறைக்கு பயணிக்கும்.

அதேபோல், ரூட் 20க்கு பதிலாக 20A மற்றும் 20B வழிகள் மாற்றப்படும். ரூட் 20A அல் நஹ்தா பஸ் ஸ்டாப்பில் இருந்து வார்சன் 3 பஸ் ஸ்டாப் வரை இயக்கப்படும். மேலும், வார்சன் 3 பஸ் ஸ்டேஷனில் இருந்து அல் நஹ்தா பேருந்து நிறுத்தத்திற்கு வழித்தடம் 20B செல்லும்.

36A மற்றும் 36B ஆகிய வழித்தடங்கள் 367க்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளன. இதில் ரூட் 36A சிலிக்கான் ஒயாசிஸ் ஹை பே பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கி எடிசலாட் பேருந்து நிலையத்தில் முடிவடையும். ரூட் 36B எடிசலாட் பேருந்து நிலையத்திலிருந்து சிலிக்கான் ஓயாசிஸ் ஹை பே பஸ் ஸ்டாப் வரை எதிர் திசையில் செல்லும்.

பின்வரும் மாற்றங்கள் பயண நேரத்தைக் குறைப்பதற்காகவும், பயணிகள் தங்கள் இடங்களுக்கு விரைவாக வந்து சேருவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

அதில் ரூட் 21 இனி ஆன்பாஸிவ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு (Onpassive Metro Station) சேவை செய்யாது. அதேபோல், ரூட் 24 துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி வரை சுருக்கப்படும் மற்றும் ரூட் 53 இன்டர்நேஷனல் சிட்டி பஸ் ஸ்டேஷன் வரை நீட்டிக்கப்படும்.

அதேசமயம், F17 வழித்தடமானது ஆன்பாஸிவ் மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கும் வகையில் சுருக்கப்படும் மற்றும் F19A மற்றும் F19B ஆகிய வழித்தடங்கள் பிசினஸ் பே மெட்ரோ பஸ் ஸ்டாப் சவுத் 2 வழியாக செல்லும் வகையில் சுருக்கப்படும். இவற்றுடன் H04 வழித்தடமானது ஹத்தா சூக் வழியாகத் திருப்பிவிடப்படும்.

அத்துடன் 10, 21, 27, 83, 88, 95, 32C, 91A, X28, X92 மற்றும் X94 ஆகிய வழித்தடங்களைப் பொறுத்தவரை, பேருந்துகளுக்கு நடந்து செல்லும் தூரத்தைக் குறைக்க மெட்ரோ மேக்ஸ் பேருந்து நிறுத்தத்தின் இடம், தெற்கு நோக்கி மெட்ரோ மேக்ஸ் ஸ்டாப் 2-க்கு சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது.

வழித்தடங்கள் 29, 61 மற்றும் C26 ஆகியவற்றைப் பொறுத்தவரை, இந்த வழித்தடங்கள் கடந்து செல்லும் மெட்ரோ மேக்ஸ் நிறுத்தத்தின் இடம் அல் ஜாஃபிலியா பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, 5, 15, 21, 24, 28, 31, 34, 44, 50, 51, 53, 61, 64, 95A, 96, C04, C28, E102, F01, F15, F26, F17, F19A, F19B, F24, F30, F31, F41, F48, F53, F54, F81, H04 ஆகிய 33 பேருந்துகளின் பயண நேரத்தையும் அதிகரிக்க RTA இன் பொதுப் போக்குவரத்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து போன்ற பிற பொதுப் போக்குவரத்து முறைகளுடன் பொதுப் பேருந்து நெட்வொர்க்கையும் விரிவுபடுத்தி ஒருங்கிணைப்பதில் RTA இன் ஆர்வத்தை இந்த மாற்றங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், பயணிகளின் விருப்பமான தேர்வாக பேருந்துப் போக்குவரத்தை மாற்ற RTA முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!