அமீரக செய்திகள்

துபாய்: குளோபல் வில்லேஜ் இயங்கும் நேரத்தில் புதிய மாற்றம்… ரமலான் மாதத்தை முன்னிட்டு அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பன்முக கலாச்சார குடும்ப இலக்கான துபாயின் குளோபல் வில்லேஜ், புனித ரமலான் மாதத்தில் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவங்களை வழங்க தயாராக உள்ளது. அதே நேரத்தில், அதன் வழக்கமான திறப்பு நேரத்தை மாற்றியமைத்து ரமலான் மாதத்தை முன்னிட்டு புதிய நேரத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, குளோபல் வில்லேஜ் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலான வழக்கமான நேரத்துக்கு மாறாக, ரமலான் மாதத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பார்வையாளர்களை வரவேற்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இங்குள்ள இஃப்தார் மற்றும் சுஹூர் உணவுகளை பல்வேறு உணவு வகைகளில் விதவிதமான விருப்பங்களுடன் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், புத்தம் புதிய ரமலான் வொண்டர்ஸ் சூக், பார்வையாளர்களுக்கு அருமையான ஷாப்பிங் அனுபவத்தை உறுதியளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போட்டியில் வென்றால் பரிசு:

அத்துடன் குளோபல் வில்லேஜ் இந்த பண்டிகை மாதத்தில், ‘Step Challenge’ என்ற போட்டியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சவாலில் பங்கேற்க விரும்புபவர்கள் குளோபல் வில்லேஜ் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து அங்கு சுற்றிப்பார்க்க வேண்டும். ஒரே வருகையில் 10,000 படிகளை எட்டுபவர்கள் தானாகவே வாராந்திர டிராவிற்கு தகுதி பெறுவார்கள்.

புனித ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி மொபைல் ஃபோன்கள், ஆப்பிள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட பரிசுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்:

இவை தவிர, பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்க, 30 கலைஞர்கள் கொண்ட அரேபிய ஆர்கெஸ்ட்ரா தினமும் மெயின் ஸ்டேஜில் இசைக்கப்படும். இதனுடன் டூயல் ஹார்ப்ஸ் ஷோ, வயலின் பிளேயர் மற்றும் தன்னூரா ஷோ உள்ளிட்ட பல நேரடி நிகழ்ச்சிகளும் மினி வேர்ல்டில் மெயின் ஸ்டேஜ் மற்றும் வொண்டர் ஸ்டேஜ் இடையே மாறி மாறி பார்வையாளர்களை உற்சாகமூட்டும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை வானத்தை ஒளியூட்டுவதைப் பார்த்து ரசிக்கலாம். அதே நேரத்தில், பார்வையாளர்கள் டிராகன் லேக் பிரத்யேக லேசர் மற்றும் ஃபயர் ஷோவைக் கொண்ட ரமலான் பின்னணியில் தலைசிறந்த படைப்பாக மாறுவதையும் ரசிக்கலாம்.

கூடுதலாக, ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய மறைவின் போது, நோன்பு முடிவதைக் குறிக்கும் வகையில், குளோபல் வில்லேஜின் பிரபலமான ரமலான் கனான் ஃபயரிங் (Ramadan Cannon) நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!