வளைகுடா செய்திகள்

சவூதியின் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதல்..!!

சவூதியை நோக்கி ஏமனின் ஹவுதி போராளிகள் ஞாயிறு அன்று தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் சிலவற்றை சவூதி தலைமையிலான கூட்டணி இடைமறித்து அழித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA, ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறிக்கும் வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி போராளிகள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹவுதி போராளிகள் சவூதி அரேபியாவின் Aramco நிறுவனத்தை சார்ந்த கேஸ் உற்பத்தி நிறுவனம், கடல் நீரை குடிநீராக்கும் நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், எண்ணெய் நிறுவனம் உள்ளிட்டவற்றில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த தாக்குதலானது உலகின் மிக முக்கியமான எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான சவூதியின் எண்ணெய் நிறுவனங்களைத் தாக்கியது மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியது என கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் நடத்திய தாக்குதலில், துறைமுக நகரமான ஜித்தாவில் உள்ள அரம்கோ விநியோக நிலையத்தில் உள்ள எரிபொருள் டேங்கர் தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஹவுதி போராளிகள் நடத்திய இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உட்பட மற்ற உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Related Articles

Back to top button
error: Content is protected !!