ADVERTISEMENT

அமீரகத்தில் பணிபுரியும் நபர் வருடாந்திர விடுமுறையின் போது வேறொரு நிறுவனத்தில் பணிபுரியலாமா..?? சட்டம் சொல்வது என்ன..??

Published: 24 Sep 2022, 8:08 AM |
Updated: 21 Dec 2022, 8:57 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் நபர்கள் வருடாந்திர விடுப்பில் இருக்கும் போது,  அமீரகத்தைச் சார்ந்த மற்றொரு நிறுவனத்தின் ஒரு ப்ராஜெக்டில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால், அத்தகைய வேலையை மேற்கொள்வது சட்டப்பூர்வமானதா? இவ்வாறு ஒரு நபர் தனது வருமானத்தை பகுதி நேர வேலையும் பார்த்து அதிகரித்துக் கொள்ள விரும்பினால், ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டம் மற்றும் அதன் நிர்வாக விதிமுறைகள் என்ன அனுமதிக்கும், அனுமதிக்காது என்பதைப் பற்றி புரிந்துகொள்வது அவசியம் ஆகும்.

ADVERTISEMENT

புதிய அமீரக தொழிலாளர் சட்டம், 2021 இன் பெடரல் ஆணை-சட்டம் எண். 33-ன் படி, ஒரு நபர் வருடாந்திர விடுப்பின் போது வேறு நிறுவனத்தில் வேலை செய்வதை வெளிப்படையாகத் தடை செய்யவில்லை. அதாவது ஒரு தொழிலாளியின் வருடாந்திர விடுப்பின் போது,​​அந்த காலகட்டத்தில் அவர் வேறொரு முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு வேலை செய்ய முடிந்தால், அத்தகைய செயலைத் தடைசெய்யும் குறிப்பிட்ட விதிமுறை எதுவும் இல்லை என்று துபாயை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான ADG Legal இன் அசோசியேட் Moamen Hamdy Abdelmoamen தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தடை என்பது முதலாளிக்கும் (நிறுவனம்) தொழிலாளிக்கும் இடையிலான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தினை (employment contract) பொறுத்தது. இது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவை விரிவாக ஒழுங்குபடுத்துகிறது” என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில், “இருப்பினும், எல்லா சந்தர்ப்பங்களிலும், ஒரு நபருக்கு வேலை வழங்கக்கூடிய இரண்டாவது நிறுவனம் புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் சட்ட எண் 29-ன் படி வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வதிவிடச் சட்டத்தின் கீழ் பணி அனுமதி அளவுகோல்களின் விதிகளுக்கு இணங்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வருடாந்திர விடுப்பின் போது பகுதிநேர வேலை செய்ய விரும்பினால் என்ன நடக்கும்?

வழக்கறிஞர் ஒருவரின் கூற்றுப்படி, இந்த வேலை முறையாக செய்யப்படும் வரை, மற்றொரு முதலாளியிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்வது சட்டப்பூர்வமானதாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது “ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் கீழ், ஊழியர்கள் தனது முழுநேர வேலை செய்யும் நிறுவனத்துடன் கூடுதலாக இப்போது பகுதி நேரமாகவோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ வேலை செய்யலாம். இருப்பினும், அதற்கு தற்காலிக பணி அனுமதி (work permit) தேவையாகும். இது இரண்டாவது முதலாளி அல்லது நிறுவனத்தால் பெறப்பட வேண்டும்”.

ADVERTISEMENT

“அத்தகைய பணி அனுமதியைப் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று தற்போதைய முதலாளியிடமிருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது (NOC) ஆகும். எனவே, இது தொடர்புடைய விதிமுறைகளில், ஒரு ஊழியர் தற்போதைய நிறுவனத்திடம் இருந்து NOC வைத்திருக்கும் வரை, மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்வது சட்டப்பூர்வமானது” என்று கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக வேலை செய்ததற்கான அபராதம்

பகுதிநேர வேலை செய்வதற்கு உண்டான சட்ட செயல்முறையைப் பின்பற்றத் தவறினால், ஒரு தொழிலாளியை சட்டவிரோதமாக பணியமர்த்தியதாகக் கண்டறியப்பட்ட தொழிலாளிக்கும் முதலாளிக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி “சரியான பணி அனுமதி இல்லாமல் பணிபுரிவதற்கான அபராதம் 50,000 திர்ஹம் முதல் 200,000 திர்ஹம் வரை இருக்கும் என்றும், இது தொழிலாளி மற்றும் இரண்டாவதாக பணிபுரிய அனுமதித்த முதலாளி ஆகிய இருவருக்கும் பொருந்தும். மேலும், சட்டத்தை மீறுவது, முன்னறிவிப்பின்றி தொழிலாளரை பணிநீக்கம் செய்வதற்கான உரிமையை முதன்மை முதலாளிக்கு வழங்குகிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.