அமீரக செய்திகள்

துபாயில் மக்கள்தொகை அதிகரிப்பு: குறிப்பிட்ட பகுதிகளில் அபார்ட்மெண்ட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ரியல் எஸ்டேட் துறை நிர்வாகிகள் தகவல்….

துபாயில் சில பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் புதிய யூனிட்கள் போதிய அளவில் வழங்கப்படாததால் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து பற்றாக்குறை காணப்படுவாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரியல் எஸ்டேட் துறை நிர்வாகிகளின் கூற்றுப்படி, பர் துபாய் மற்றும் தேரா போன்ற பழைய துபாய் பகுதிகள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், அந்த பகுதிகளில் புதிய அபார்ட்மெண்ட் யூனிட்கள் வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட புதிய யூனிட்களின் எண்ணிக்கை மக்கள்தொகை வளர்ச்சியை விட மிகக் குறைவாக இருப்பதால், வாடகைக்கு சிறிய அபார்ட்மெண்ட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், துபாயில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு மத்தியில் தேவையை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

துபாயின் மக்கள்தொகை கடந்த ஆண்டு 100,000 க்கும் அதிகமாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 176,000 க்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இது அமீரகத்திற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகையால் உந்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பழைய துபாய் பகுதிகளில் அபார்ட்மெண்ட் வாடகைகளில் இரட்டை இலக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாயின் புதிய பகுதிகள் புதிய யூனிட்களுக்கான அதிக தேவையைத் தூண்டுவதுடன் அதிக திட்டங்களைத் தொடங்க டெவலப்பர்களை கவர்ந்திழுப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், துபாயின் புதிய பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு போதுமான சிறிய யூனிட்களை வழங்குவதற்கு சப்ளை இருப்பதாக தொழில்துறை நிர்வாகிகள் கூறியுள்ளனர், இது 2040 க்குள் கிட்டத்தட்ட 6 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஓல்ட் துபாயில் 20 முதல் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய மற்றும் அதிக விசாலமான அடுக்குமாடி குடியிருப்புகளே அதிகம் இருப்பதால், சிறிய அபார்ட்மென்ட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

விசாலமான பெரிய குடியிருப்புகள்:

அந்த காலகட்டத்தில், துபாயில் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அதிகம் இருந்ததால், தனியார் உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் விசாலமான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கம், சிறிய குடியிருப்பு பகுதிகளுக்கான தேவை அதிகரித்தது மற்றும் மலிவு விலையில் வீட்டு வசதிகளை விட உயர்தர ரியல் எஸ்டேட் மேம்பாடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல் போன்றவை இந்த பற்றாக்குறைக்கு காரணம் என்று ACE Luxury Propertyஇன் CEO அலன் ஜேம்ஸ் கேமன் கூறியுள்ளார்.

பழைய துபாயின் கலாச்சார செழுமை அதன் கவர்ச்சியை சேர்க்கும் அதே வேளையில், இடப்பற்றாக்குறையானது சிறிய வீடுகள் மற்றும் கூடுதல் சேவைகள் கிடைப்பதைத் தடுக்கிறது. எனவே, பழைய பகுதிகளில் பல புதிய குடியிருப்பாளர்கள் துணை மற்றும் பகிரப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் நியூ துபாய், அதன் சமகால குடியிருப்பு மற்றும் சில்லறை திட்டங்கள், விரிவான நிலப்பரப்பு மற்றும் ஆடம்பரமான குடியிருப்புகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, மேலும் ஸ்டுடியோக்கள் மற்றும் ஒரு படுக்கையறை அபார்ட்மெண்ட்களை அதிக அளவில் வழங்குகிறது என்று கேமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியூ துபாய் மெரினா, JBR மற்றும் JLT போன்ற முதன்மையான பகுதிகள், பழைய துபாயுடன் ஒப்பிடும்போது, ​​ஆண்டுதோறும் 27-48 சதவீதம் வரை சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை மற்றும் வாடகைகளில் அதிகரிப்பைக் காண்கின்றன, அங்கு இது 8-9 சதவீதமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!