அமீரக செய்திகள்

துபாயில் அப்டேட் செய்யப்பட்ட குடியிருப்பு வாடகை கணக்கீடு முறை.. 20 சதவீதம் வரை வாடகை உயரும் எனத் தகவல்..!!

அமீரகத்திலேயே மிகவும் அதிகமான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்கள் வசிக்கக்கூடிய எமிரேட்டான துபாயில், குடியிருப்பு கட்டிடங்களுக்கான வாடகை கணக்கீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குடியிருப்புகளில் வாடகைக்கு வசிப்பவர்களை பாதிக்கும் என்றும் துபாய் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துபாயின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தால் (Real Estate Regulatory Authority – RERA) தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ள குடியிருப்பு வாடகை கணக்கீடின் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்புகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு வாடகைக் கட்டணம் உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது எதிர்காலத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் ரியல் எஸ்டேட் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமீரகத்தின் மிகப்பெரிய தனியார் மற்றும் வணிக சொத்துக்களை நிர்வகிக்கும் Betterhomes நிறுவனத்தின் CEO ரிச்சர்டு வைன்ட் என்பவர் இது குறித்து குறிப்பிடுகையில், RERA கணக்கீடு (Rera calculator) துபாயில் மார்ச் 1ம் தேதி புதுப்பிக்கப்பட்டதாகவும், இது சந்தையில் நிலவும் அன்றைய நாளுக்கான வாடகைக்கு ஏற்ப எதிர்கால புதுப்பித்தல்களைக் கொண்டுவருவதாகவும் கூறியுள்ளார்.

தற்போதைய அப்டேட்டின் படி, RERA வாடகை கணக்கீடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் தங்கள் சொத்தின் விவரங்களை உள்ளிட அனுமதிக்கிறது. அத்துடன் குத்தகை காலம் முடிந்து மீண்டும் புதுப்பித்தலின் போது எவ்வளவு வாடகை அதிகரிக்கலாம் என்பதையும் RERA கூறுகிறது.

எனவே, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு கட்டிடங்களில் வசிக்கும் குத்தகைதாரர்களை இது பாதிக்கக்கூடும் எனவும், மேலும் கணக்கீட்டு முறை திருத்தத்திற்கு முன் இருந்ததை விட புதுப்பித்தலின் போது குடியிருப்பாளர்கள் கணிசமான வாடகை அதிகரிப்பைக் காணலாம் எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் துபாயின் ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ள பகுதிகளான சென்ட்ரல் வில்லா சமூகங்கள் மற்றும் வாட்டர்பிரன்ட் அபார்ட்மென்ட் சமூகங்கள் ஆகிய பிரிவுகளில் வாடகையானது புதுப்பித்தலின் போது 20 சதவீதம் வரை உயரும் என்றும் Betterhomes நிறுவனத்தின் CEO ரிச்சர்டு வைன்ட் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!