அமீரக செய்திகள்

UAE: மற்ற எமிரேட்டில் இருந்து துபாய் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகளின் வசதிக்காக, துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற எமிரேட்களின் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு தங்கள் ஓட்டுநர் உரிமத்தை துபாய்க்கு மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மற்ற எமிரேட்களில் இருந்து தினமும் ஏராளமானோர் துபாய்க்கு வேலைக்கு செல்வதால், வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளவும், போக்குவரத்து அபராதம் எதையும் எளிதாகச் செலுத்தவும் இது உதவும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற எமிரேட்டுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் துபாய்க்கு வேலைக்காக ஒவ்வொரு நாளும் பயணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற எமிரேட்களில் இருந்து துபாய்க்கு ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய படிப்படியான வழிகாட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யார் தகுதியானவர்கள்?

தனிப்பட்ட வாடிக்கையாளர்கள்

ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்

குடியிருப்பாளர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்

செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி

மற்ற எமிரேட்டில் இருந்து பரிமாற்ற கடிதம் (transfer certificate)

மின்னணு கண் பரிசோதனை

மருத்துவ பரிசோதனை (வாடிக்கையாளரின் தொழில் ஓட்டுநராக இருந்தால்)

செலவு எவ்வளவு?

ட்ராஃபிக் கோப்பைத் (traffic file) திறக்க 200 திர்ஹம்

ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு 600 திர்ஹம்

கையேடுக்கு (handbook manual) 50 திர்ஹம்

கட்டணம் (knowledge and innovation fee) 20 திர்ஹம்

எவ்வளவு நேரம் எடுக்கும்?

வாடிக்கையாளரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் RTA இன் மையத்திற்கு ஒரு முறை மட்டும் வருகை தந்தாலே போதுமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!