அமீரக செய்திகள்

UAE: உங்களிடம் காலி பிளாஸ்டிக் பாட்டில் உள்ளதா…?? இனிமேல் இலவசமா பேருந்தில் பயணம் செய்யலாம்..!! நீங்க செய்ய வேண்டியது இவ்ளோதான்..!!

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) பயணிகளை பொதுப் பேருந்துகளில் இலவசப் பயணங்களைப் பெற ஊக்குவிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த முன்முயற்சியின் முதல் கட்டத்தில், அபுதாபியின் பிரதான பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் டெபாசிட் இயந்திரம் நிறுவப்படும் என்றும் இதன் மூலம் பயணிகள் வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிப்பதற்கான புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அபுதாபியின் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் டெபாசிட் இயந்திரத்தில் நாம் போடும் ஒவ்வொரு பாட்டில்களுக்கும் ஏற்றவாறு புள்ளிகள் (points) வழங்கப்படும்.

அவை பின்வருமாறு கணக்கிடப்படும்:

ஒவ்வொரு சிறிய பாட்டில் (600 மில்லி அல்லது அதற்கும் குறைவானது) 1 புள்ளியைப் பெறும்.

அதே நேரத்தில் பெரிய பாட்டில்கள் அல்லது 600 மில்லிக்கு மேல் பாட்டில்கள் 2 புள்ளிகளைப் பெறும்.

ஒவ்வொரு புள்ளியும் 10 ஃபில்களுக்கு (fills) சமம், எனவே 10 புள்ளிகள் 1 திர்ஹமிற்கு சமமானதாகும்.

அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் (EAD), அபுதாபி கழிவு மேலாண்மை மையம் “tadweer” மற்றும் “DGrade” ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

புள்ளிகளின் இருப்புத்தொகையானது தொகுக்கப்பட்டு “Hafilat” பேருந்து அட்டைக்கு மாற்றப்படும். பின் ITC தானியங்கு கட்டண முறையானது, பயணத்திற்குத் தேவையான கட்டணத்தைக் கணக்கிட்டு, பேருந்தில் நிறுவப்பட்ட கட்டண இயந்திரங்கள் மூலம் கார்டில் சேமிக்கப்பட்டுள்ள பண மதிப்பிலிருந்து தானாகவே கழிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!