அமீரக செய்திகள்

ஓமானில் பிறை தென்படாததால் சனிக்கிழமையை ஈத் அல் ஃபித்ராக அறிவித்த அதிகாரிகள்..!!

ஓமானில் ஈத் அல் ஃபித்ரை குறிக்கும் ஷவ்வால் பிறையை இன்று (வியாழக்கிழமை) பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று பிறை தென்படவில்லை என ஓமான் நாட்டின் பிறை பார்க்கும் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை ஈத் அல்-பித்ரின் முதல் நாளாக கொண்டாடப்படும் என ஓமான் அறிவித்துள்ளது. முன்னதாக, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறையை ஓமான் அரசு அறிவித்திருந்தது.

இதன்படி, ஏப்ரல் 20 வியாழன் முதல் ஏப்ரல் 24, 2023 திங்கள் வரை ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டும் என்றும் ஏப்ரல் 25, செவ்வாய் அன்று மீண்டும் வேலை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓமான் தவிர மற்ற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை பார்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை வெள்ளக்கிழமை சவூதி மற்றும் அமீரகத்தில் ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!