ADVERTISEMENT

புதிய என்ட்ரி பெர்மிட் விதி: அமீரகம் வரும் குறிப்பிட்ட நாட்டு குடிமக்களுக்கு நோய் இல்லா சான்றிதழ் கட்டாயம்..!!

Published: 20 Oct 2022, 2:11 PM |
Updated: 20 Oct 2022, 2:38 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் போர்ட் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையமானது, visa exemption countries என்று சொல்லக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு முன் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக விலக்கு அளிக்கப்பட்ட சில நாடுகளின் குடிமக்களுக்கு, என்ட்ரி பெர்மிட் வழங்குவதற்கான தேவைகளில் ஒன்றாக நோய் இல்லாத சான்றிதழை (disease-free certificate) வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் உள்ளூர் செய்தித்தாளான எமரத் அல் யூம் அறிக்கையின்படி, ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வண்ண புகைப்படத்துடன் கூடுதலாக இந்த சான்றிதழும் இனி அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விசா விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தரவுகளின்படி கட்டாய மற்றும் விருப்ப ஆவணங்கள் வேறுபடலாம் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் என்ட்ரி பெர்மிட் வழங்குவதற்கான நடைமுறைகள் பல்வேறு வழிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆணையம் அதன் இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது. அதன்படி ஆணையதமின் இணையதளம், ஸ்மார்ட் அப்ளிகேஷன், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் ஆகியவை இதில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT