ADVERTISEMENT

அமீரகத்தின் டூரிஸ்ட்/விசிட் விசா இனி இவர்களுக்கு இல்லை..!! புதிய விதி அமல்..!! அமீரகம் வர இருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

Published: 22 Nov 2022, 12:55 PM |
Updated: 22 Nov 2022, 1:22 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் பயணிக்கும் நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அமீரகத்திற்கு விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் பயணிக்கும் பயணிகள் தங்களது பாஸ்போர்ட்டில் குறைந்த பட்சம் இரண்டு பெயர்கள் வைத்திருக்கு வேண்டும் என்றும் ஒரு பெயர் மட்டும் உள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இனி இந்த விசா கிடைக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை அமீரகத்தில் செயல்பட்டு வரும் டிராவல் நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. அதேபோல் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் டிராவல் நிறுவனங்களுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள அனைத்து பயண முகவர்களுக்கும் இது பற்றி அனுப்பப்பட்ட அறிவிப்பில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டில் முதன்மை (முதல் பெயர்- First name) மற்றும் இரண்டாம் நிலை (குடும்பப்பெயர்- Surname) பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, “குடும்பப்பெயர் (surname) அல்லது கொடுக்கப்பட்ட பெயரில் (given name) ஒற்றைப் பெயர் (single name) கொண்ட எந்தவொரு பாஸ்போர்ட் வைத்திருப்பவரும் ஐக்கிய அரபு அமீரக இமிகிரேஷனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார். மேலும் அந்த பயணி INAD (InAdmissable passanger- இது நாட்டிற்குள் அனுமதிக்க முடியாத பயணிகளைக் குறிக்கிறது) ஆகக் கருதப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் பாஸ்போர்ட்டில் இருக்கும் Given Name-ல் இரண்டு பெயர்கள் இடைவெளி விட்டு இருந்து Surname-ல் பெயர் எதுவும் இல்லையென்றாலும் அந்த நபரின் விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல் நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பாஸ்போர்ட்டில் ஒரு பயணியின் பெயர் பாஸ்போர்ட்டில் இருக்கும் Given Name-ல் பிரவீன் என்று இருந்து Surname-ல் எவ்வித பெயரும் இல்லையென்றாலோ அல்லது Surname-ல் மட்டும் பிரவீன் என ஒற்றைப் பெயராக இருந்தாலோ அந்த பயணிக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் சுற்றுலா அல்லது விசிட் விசாவில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும், ஆனால் ரெசிடென்ஸ் அல்லது வேலைவாய்ப்பு விசாக்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று இது குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.