அமீரக செய்திகள்

UAE: இனி விசிட் விசாவை நாட்டை விட்டு வெளியேறாமலேயே நீட்டிக்கலாம்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட ICA..!!

ஐக்கிய அரபு அமீரகமானது அதன் விசிட் விசா நடைமுறைகளில் புதிய மாற்றத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 30 அல்லது 60 நாட்கள் விசிட் விசாவில் வந்த சுற்றுலாப்பயணிகள், நாட்டிற்குள் தங்கும் காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு அனுபவங்கள் மற்றும் சலுகைகளை பெற பார்வையாளர்களுக்கு கூடுதலாக 30 நாட்களை வழங்க, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் (ICA) மற்றும் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஆகியவை இணைந்து முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமீரகமானது கடந்த வருட அக்டோபர் முதல் தனது விசா நடைமுறைகளில் பல மாற்றங்களைச் செயல்படுத்தியது, அதன் பின்னர், நாட்டின் விசிட் விசா அமைப்பில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ICA அறிவிப்பின்படி, 30 அல்லது 60 நாட்கள் விசிட் விசா வைத்திருக்கும் நபர்கள் இப்போது கூடுதலாக 30 நாட்கள் நாட்டில் தங்கலாம் என்றும் அதிகபட்சமாக 120 நாட்கள் அமீரகத்தில் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அமீரகத்திற்குள் விசிட் விசா நீட்டிப்பு சாத்தியம் என்றும், கால நீட்டிப்புக்கு ஒருவர் தங்கள் விசா வழங்கும் ஏஜென்டை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!