அமீரக செய்திகள்

அமீரகத்தின் குழந்தை பாதுகாப்பு சட்டங்கள்: இந்த மீறல்களுக்கு 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் குழந்தைகளை காரில் விட்டுச்செல்லும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு குழந்தை உரிமைச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மற்றும் புஜைரா காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.

இந்த எச்சரிக்கையானது ‘Your Children, Your Responsibility’ என்ற முன்முயற்சியின் தொடக்கத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சட்டம் Wadeema’s Law என்றும் அழைக்கப்படுகிறது, இது நாட்டில் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

வடீமா சட்டத்தின் படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை அலட்சியப்படுத்தி நிறைவேற்றாமல் இருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆகவே, இந்த குற்றச் செயல்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடும்.

இதுபோல, சட்டத்தில் குற்ற நடவடிக்கைகளாக பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

5000 திர்ஹம் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் குற்றங்கள்:

1. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தையின் பிறப்பு, குடியுரிமை மற்றும் பிற தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, வழங்க வேண்டும். இது போன்ற குழந்தைகளின் சிவில் உரிமைகளை வழங்குவதைத் தவிர்ப்பது குற்றமாகக் கருதப்படுகிறது.

2. குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்து, புறக்கணிப்புசட்டத்தின் பிரிவு 34 இன் படி, குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க மறுப்பது, அவரது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பது, உளவியல் மற்றும் உடல் ரீதியாக ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் சரியான காரணமின்றி அவர்களை பராமரிப்பு நிறுவனத்தில் விட்டுச் செல்வது போன்ற செயல்கள் சட்டத்திற்கு புறம்பானதாகும். மேற்கூறிய விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை அல்லது 5,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படலாம்.

3. குழந்தைகளுக்கு வரும் ஆபத்துகள் அல்லது ச்சுறுத்தல்களைப் புகாரளிக்காமல் இருப்பது, மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒரு குழந்தையை அச்சுறுத்தும் ஆபத்தை தெரிவிக்கத் தவறுவது போன்ற நடத்தைகள் கட்டுரை 42 இன் பிரிவு 2 உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

5000 முதல் 50000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் வழக்குகள்:

  1. குழந்தைகள் தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறினால், அதை நீங்கள் அதிகாரிகளிடம் புகாரளிக்காமல் இருப்பது, குழந்தைக்கு உதவ மறுக்கும் குற்றமாகக் கருதப்படும்.
  2.  குழந்தைப் பாதுகாப்பு நிபுணரின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுத்தல் அல்லது அவரது பணிக்கு இடையூறு விளைவித்தல்.
  3.  குழந்தையின் நிலை குறித்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து தவறான தகவலை வழங்குதல்.
  4. குழந்தைகளை சுற்றி புகைபிடித்தல்.

ஆறு மாதம் வரையிலான சிறைத்தணடனை விதிக்கப்படும் வழக்குகள்:

நாட்டில் குறிப்பிட்ட வயது வரம்பினர் மட்டும் செல்லக்கூடிய பல்வேறு பொது இடங்கள் உள்ளன. அத்தகைய இடங்களுக்கு குழந்தைகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டிருந்தால், கட்டுப்பாடுகளை மீறும் எவருக்கும் ஆறு மாதங்கள் வரை சிறை, குறைந்தபட்சம் 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

சிறைத்தண்டனையுடன் 20,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மீறல்கள்:

15 வயதுக்குட்பட்ட குழந்தையை வேலைக்கு அமர்த்துதல் அல்லது பிச்சையெடுக்க கட்டாயப்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு பொருந்தும்.

சிறை தண்டனையுடன் 50,000 திர்ஹம் அபராதம்:

ஒரு குழந்தையை உடல் மற்றும் உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தல்.

10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள்:

குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அல்லது வேறு ஏதேனும் பாலியல் செயல்களை படமாக்குவதில் பாதுகாவலரின் பங்கு அல்லது அத்தகைய செயல்களில் குழந்தைக்கு உதவுதல்.

Related Articles

Back to top button
error: Content is protected !!