அமீரக செய்திகள்

அமீரகத்தில் மேகமூட்டமான வானிலை: சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக NCM அறிக்கை!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும். அதேசமயம், சில பகுதிகளில், குறிப்பாக வடக்கு நோக்கி லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்றிரவு மற்றும் வியாழன் காலை சில உள் பகுதிகளில் குடியிருப்பாளர்கள் ஈரப்பதமான வானிலையை உணர்வார்கள் மற்றும் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக மையம் கூறியுள்ளது.

NCM இன் கூற்றுப்படி, சில சமயங்களில் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும். இதனிடையே ரேபிய வளைகுடா பகுதியில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் லேசானது முதல் மிதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி மற்றும் துபாயில் அதிகபட்ச வெப்பநிலைகள் முறையே 25°C ​​மற்றும் 26°C வரை உயரும் மற்றும் தலைநகரில் 18°C ​வரையிலும், துபாயில் 20°C வரையிலும் குளிர்ச்சியான வெப்பநிலை பதிவாகும் என்று NCM அறிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!