அமீரக செய்திகள்

இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு துபாயில் பஸ், மெட்ரோ, ஃபெர்ரி மற்றும் அப்ரா செயல்படும் நேரங்களை வெளியிட்ட RTA!!

ஹிஜ்ரி வருடப்பிறப்பான இஸ்லாமியப் புத்தாண்டை முன்னிட்டு நாளை அமீரகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை நாளில் துபாய் முழுவதும் பொது போக்குவரத்து வசதிகள் செயல்படும் நேரமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்பாளர்கள் அதிகம் பயண்படுத்தும் துபாயின் பொதுப் போக்குவரத்து வசதிகளான பஸ், மெட்ரோ, ஃபெர்ரி மற்றும் அப்ரா ஆகியவற்றின் மாற்றியமைக்கப்பட்ட நேரம் மற்றும் கால அட்டவணைகளை RTA அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அந்த அட்டவணைகளைப் பின்வருமாறு பார்க்கலாம்.

துபாய் மெட்ரோ:

துபாய் மெட்ரோ சேவையானது, ரெட் மற்றும் கிரீன் லைனில் காலை 05:00 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, துபாய் டிராம் காலை 06:00 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை இயங்கும் என்றும் RTA கூறியுள்ளது.

பொதுப் பேருந்து:

துபாயில் உள்ள பொதுப் பேருந்துகள் ஜூலை 21 அன்று காலை 05:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை இயங்கும். அதேபோன்று அனைத்து மெட்ரோ இணைப்பு பேருந்து சேவைகளும் மெட்ரோ கால அட்டவணைகளுடன் ஒத்துப்போகும் வகையில் இயக்கப்படும்.

கடல் போக்குவரத்து – வாட்டர் பஸ்:

  • துபாய் மெரினா (BM1): மெரினா மால் – மெரினா வாக் (இருபுறமும்)– மதியம் 12:00 மணி முதல் அடுத்த நாள் காலை 12:11 வரை.
  • மெரினா ப்ரோமனேட் – மெரினா மால் (இருபுறமும்) – மாலை 4:11 முதல் இரவு 11:17 மணி வரை.
  • மெரினா டெரஸ் – மெரினா வாக் (இருபுறமும்) – மாலை 4:08 மணி முதல் இரவு 11:16 மணி வரை

வாட்டர் டாக்ஸி:

வாட்டர் டாக்ஸியைப் பயன்படுத்துவதற்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மெரினா மால் – புளூவாட்டர்ஸ் (BM3): மாலை 4:00 மணி முதல் இரவு 11:40 வரை செயல்படும்.
  • மேலும், தேவையின் அடிப்படையில்: மாலை 3:00 மணி முதல் இரவு 11:00 வரை.

அப்ரா:

  • துபாய் ஓல்ட் சூக் – பனியாஸ் (CR3) – காலை 10:00 முதல் இரவு 11:20 வரை
  • அல் ஃபஹிதி – அல் சப்கா (CR4) – காலை 10:00 முதல் இரவு 11:25 வரை
  • அல் ஃபஹிதி – தேரா ஓல்ட் சூக் (CR5) – காலை 10:00 முதல் இரவு 11:25 வரை
  • பனியாஸ் – அல் சீஃப் (CR6) – காலை 10:00 முதல் இரவு 11:57 வரை
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி – துபாய் க்ரீக் துறைமுகம் (CR9) – மாலை 4:00 முதல் இரவு 11:20 வரை
  • அல் ஜடாஃப் – DFC (BM2) – காலை 08:00 முதல் இரவு 11:30 வரை
  • சூக் அல் மர்ஃபா – துபாய் ஓல்ட் சூக் (CR12) – மாலை 4:20 முதல் இரவு 10:50 வரை
  • சூக் அல் மர்ஃபா– தேரா ஓல்ட் சூக் (CR13) – மாலை 4:05 முதல் இரவு 10:35 வரை
  • ஷேக் சயீத் சாலை மரைன் டிரான்ஸ்போர்ட் ஸ்டேஷனில் சுற்றுப்பயணம் – DWC (TR6) மாலை 4:00 முதல் இரவு 10:15 வரை

துபாய் ஃபெர்ரி:

  • அல் குபைபா – துபாய் கேனல் (FR1) – மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணி
  • துபாய் கேனல் – அல் குபைபா (FR1) – மதியம் 2:20 மற்றும் இரவு 7:20
  • துபாய் கேனல் – புளூவாட்டர்ஸ் (FR2) – மதியம் 1;50 மற்றும் மாலை 6:50
  • புளூவாட்டர்ஸ் – துபாய் மெரினா மால் (FR2) – மதியம் 2:50 மற்றும் இரவு  7:50
  • துபாய் மெரினா மால் – புளூவாட்டர்ஸ் (FR2) – மதியம் 1:00 மற்றும் மாலை 6:00
  • புளூவாட்டர்ஸ் – துபாய் கேனல் (FR2) – மதியம் 1:15 மற்றும் மாலை 6:15
  • துபாய் மெரினா சுற்றுப்பயணங்கள் (FR4) – காலை 11: 30 மற்றும் மாலை 4:30
  • சூக் அல் மார்ஃபா- அல் குபைபாCR10) – மாலை 6:15 மற்றும் இரவு 9:15

Related Articles

Back to top button
error: Content is protected !!