அமீரக சட்டங்கள்

UAE: தொழிலாளர்களுக்கு சம்பளத்தை தாமதப்படுத்தினால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம்…

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் தொழிலாளர் நலன் மிக முக்கியமானதாகும். பல்வேறு துறைகளில் சிறந்த பங்காற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாட்டின் தலைமை பல ஆணைகளை வெளியிட்டுள்ளது.

அதில் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டியது நிறுவனம் அல்லது முதலாளியின் முதன்மையான கடமையாகும். அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்

ஊதியம் வழங்கப்படும் குறித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படாவிட்டால், சம்பளம் தாமதமாக வழங்கப்படுவதாக கருதப்படுகிறது.

WPS (Wage Protection System) மோசடி 

– WPS இல் தவறான தரவு உள்ளீடு செய்து ஏமாற்றுவதற்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் வீதம் அல்லது அதிகபட்சம் 50,000 திர்ஹம் அபராதம்.

– WPS மூலம் செலுத்த வேண்டிய உரிய தேதிகளில் ஊதியம் வழங்க தவறினால், ஒரு ஊழியருக்கு 1,000 திர்ஹம் என கணக்கிட்டு அபராதம்.

– ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைப் பெற்றதாகக் காட்டும் போலி ஊதியச் சீட்டுகளில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினால் ஒரு ஊழியருக்கு 5,000 திர்ஹம் வீதம் அபராதம்.

சம்பளம் வழங்குவதில் தாமதம் (100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள்) 

– ஊதியம் 60 நாட்களுக்கு மேல் தாமதமானால், ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் வீதம் அபராதம் விதிக்கப்படும் அல்லது  அதிகபட்சமாக 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

– தாமதமான நாளிலிருந்து 16வது நாளிலிருந்து அவர்களுக்கு பணி அனுமதி வழங்கப்படாது.

– ஒரு மாதம் ஊதியத்தை தாமதப்படுத்தும் நிறுவனங்கள் தண்டனை நடவடிக்கைகளுக்காக நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

– ஒரே உரிமையாளருக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

– உரிமையாளர்(கள்) எந்த புதிய நிறுவனத்தையும் பதிவு செய்ய முடியாது. 

– ஊழியர்களின் வங்கி உத்தரவாதங்கள் கலைக்கப்படும்.

– நிறுவனம் மூன்றாவது வகைக்கு தரமிறக்கப்படும்.

– தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சம்பளம் வழங்குவதில் தாமதம் (100 தொழிலாளர்களுக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்கள்) 

– நிறுவனம் ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் அதிகமான முறை இந்த விதியை மீறினால், 100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதை போன்றே MoHRE அபராதம் விதிக்கும்.

– வேலை அனுமதி (work permit) தடை.

– அபராதம்.

– நீதிமன்றத்திற்கு பரிந்துரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!