அமீரக செய்திகள்

UAE: மீண்டும் பரவும் கொரோனா..!! ஷாப்பிங் மால், ஜிம், சினிமா திரையரங்குகளில் மீண்டும் கட்டுப்பாடை விதித்த அபுதாபி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஷாப்பிங் மால்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் சினிமா அரங்குகளில் புதிய கட்டுப்பாடுகளை அபுதாபி அரசு விதித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து அபுதாபியில் அமைந்துள்ள ஷாப்பிங் மால் மேலாளர்கள் மற்றும் சினிமா ஆபரேட்டர்கள் தெரிவிக்கையில், புதிய கட்டுப்பாடுகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து நேற்று வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலின் மேலாளர் ஒருவர் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து கூறியிருப்பதாவது, “எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து ஒரு சுற்றறிக்கை கிடைத்துள்ளது. ஷாப்பிங் மால்களில் மொத்த கொள்ளளவு 40 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் 60 சதவீதத்திலும், விளையாட்டு அரங்குகள் 50 சதவீதத்திலும் செயல்படலாம். நாங்கள் விளையாட்டு அரங்குகள் என கூறியிருப்பதை உடற்பயற்சி கூடமாக எடுத்துக்கொள்கிறோம், எனவே அதற்கேற்ப நாங்கள் அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியில் இருக்கும் மற்றொரு ஷாப்பிங் மால் மேலாளரும் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அபுதாபி நகரத்தில் சினிமா அரங்குகள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மூடப்படும் என்ற அறிவிப்பை சினி ராயல் மற்றும் வோக்ஸ் சினிமாஸ் நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளன. இதனை “மீண்டும் அறிவிக்கும் வரை நாங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறோம்” என்று சினி ராயல் நிர்வாக மேலாளரும், அதேபோன்று “அபுதாபி மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளை தற்காலிகமாக அரசாங்கம் மூடுவதற்கு நாங்கள் இணங்குகிறோம்” என்று வோக்ஸ் சினிமாஸ் தனது சமூக ஊடக பக்கங்களிலும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி மாதத்திற்கு முன்பு வரையிலும் மிக குறைவான எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது தினசரி 3,000 க்கும் அதிகாகமாவே பதிவாகி வருகின்றது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அமீரகத்தில் சற்று கூடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by VOX Cinemas (@voxcinemas)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!