ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஃபிளாஷ் சேல்: ஜூன் 6க்குள் முன்பதிவு செய்தால் சிறப்பு தள்ளுபடி..!!

இந்தியாவின் பட்ஜெட் கேரியர்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ‘ஃபிளாஷ் சேல்’ சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளதால், இந்தியாவிற்கு பயணம் செய்ய விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் இப்போது தள்ளுபடி விலைகளில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
புதிய ஃபிளாஷ் சேல் விற்பனையின் படி, ஜூலை 22, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எக்ஸ்பிரஸ் லைட்டுக்கான கட்டணங்கள் வெறும் 247 திர்ஹம்ஸிலிருந்து தொடங்குகின்றன. இந்தச் சலுகையில் எக்ஸ்பிரஸ் வேல்யூ கட்டணங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 6,128 ரூபாய் மற்றும் எக்ஸ்பிரஸ் ஃப்ளெக்ஸ் கட்டணங்கள் 7,041 ரூபாய் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் வலைத்தளம் மூலம் செய்யப்படும் எக்ஸ்பிரஸ் லைட் முன்பதிவுகளுக்கு பூஜ்ஜிய வசதி தவணைக் கட்டணம் மற்றும் கூடுதல் சாமான் விருப்பங்கள் போன்ற சலுகைகள் உள்ளன. அதாவது, 3 கிலோ கேபின் சாமான்களை இலவசமாக முன்பதிவு செய்யலாம் மற்றும் சர்வதேச விமானங்களில் 20 கிலோவுக்கு 1,300 ரூபாய் (Dh55.6) தள்ளுபடி செய்யப்பட்ட செக்-இன் சாமான்கள் கட்டணங்களைப் பெறலாம்.
எனவே, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணம் செய்யவிருக்கும் பயணிகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் வலைத்தளம், மொபைல் ஆப் அல்லது முக்கிய முன்பதிவு தளங்கள் வழியாக இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும், ஜூன் 6 வரை இதற்கான முன்பதிவுகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கட்டணங்கள் தள்ளுபடியில் உள்நாட்டு வழித்தடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஜூன் 12 முதல் செப்டம்பர் 24 வரை பயணத்திற்கு 57.7 திர்ஹம்ஸ் முதல் கட்டணம் தொடங்குகிறது. விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, லாயல்டி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற தகுதியுள்ள குழுக்கள் கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel