அமீரக செய்திகள்

துபாய்: ரமலானை முன்னிட்டு மெட்ரோ, பேருந்து, டிராமின் புதிய நேர அட்டவணையை வெளியிட்ட RTA ..!!

அமீராகத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் புனித ரமலான் மாதம் தொடங்கவிருப்பதை தொடர்ந்து துபாயில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளான துபாய் மெட்ரோ, துபாய் டிராம் மற்றும் பேருந்து போன்றவற்றின் மாற்றம் செய்யப்பட்ட சேவை நேரங்களை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

>> துபாய் மெட்ரோ

ரெட் லைன் வழியாக இயக்கப்படும் மெட்ரோ சேவையானது சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 வரை செயல்படும். வியாழக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும். வெள்ளிக்கிழமைகளில், மெட்ரோ சேவையானது காலை 10 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1 மணிக்கு முடிவடையும்.

கிரீன் லைன் வழியாக இயக்கப்படும் மெட்ரோ சேவையானது சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 5.30 மணி முதல் நள்ளிரவு 12 வரை செயல்படும். வியாழக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை இருக்கும்.

>> துபாய் டிராம்

துபாய் டிராம் சேவையானது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான நாட்களில் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயங்கும். வெள்ளிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயக்கப்படும்.

>> துபாய் பேருந்துகள்

– பிரதான நிலையங்கள் (கோல்டு சூக் நிலையம் உட்பட) அதிகாலை 4.29 மணி முதல் 12.29 மணி வரை இயங்கும்.

– அல் குபைபா நிலையம் அதிகாலை 4.16 முதல் அதிகாலை 1 மணி வரை இயங்கும்.

– துணை நிலையங்கள் (சத்வா நிலையம் உட்பட) அதிகாலை 4.45 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். (இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் C01 பேருந்து மட்டும் 24 மணிநேரமும் இயங்கும்).

– அல் குஸைஸ் பேருந்து நிலையம் அதிகாலை 4.31 மணி முதல் 12.04 மணி வரை இயங்கும்.

– அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் நிலையம் காலை 5.05 மணி முதல் இரவு 11.35 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

– ஜெபல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் 12.15 வரை செயல்படும்.

>> வாகன சோதனை மையங்கள் செயல்படும் நேரம்

– தஸ்ஜீல் (அல்-அவீர், அல்-டுவார் மற்றும் வார்சன்): காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

– ஹத்தா மையம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

– ஜெபல் அலி டிஸ்கவரி கார்டன் மற்றும் அரேபியா நகர மையங்கள்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

– அல் குசைஸ், அல் பர்ஸா மற்றும் மோட்டார் சிட்டி: காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 வரை

– ஆட்டோ புரோ மையம் (சத்வா மற்றும் மன்கூல்): காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை

– அல் அவிரில் உள்ள அல் முத்தகமெலா மையம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

– அல் குவோஸில் உள்ள அல் முத்தகமெலா மையம்: காலை 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

– எமாரத் மையம் (அல் அடிட், நாத் அல் ஹமர் மற்றும் அல் கிசைஸ்): காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை

– வாசில் மையம் (அல் ஜதாஃப், அல் அரபி மற்றும் நாத் அல் ஹமர்): காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

– அல் முமாயாஸ் மையம் (அல்-மிஷார் மற்றும் அல் பர்ஸா மால்): காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

>> வாடிக்கையாளர் சேவை மையம்

வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!