ADVERTISEMENT

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

Published: 27 Feb 2020, 10:53 AM |
Updated: 7 Mar 2020, 8:50 PM |
Posted By: jesmi

மதுரையில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வண்டியூரில் இருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் தடை செய்துள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மதுரையில்  நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி , 27 கிலோ மீட்டர் தூரத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. கூடுதலாக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல தனி வழி போன்ற அடிப்படை இல்லை என்றும் கூறப்பட்டடிருந்தது.

இதனையொட்டி பல பொதுநல வழக்குகள் போடப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தனர்.

ADVERTISEMENT

இதன்படி, இன்று காலை முதல் வண்டியூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை வசதிகள் செய்து முடிக்கும் வரை கட்டணம் வசூலிக்க தடை இருக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.