புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் கெனரி தீவு ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவு ஆகும். குளிர்காலங்களில் ஐரோப்பியர்களின் மிகவும் பிடித்தமான இடமாக இந்த கெனரி தீவு திகழ்கிறது.
ஆனால் கடந்த சில தினங்களாக சஹாராவிலிருந்து வீசும் மணல் புயலால் அங்குள்ள மக்களும் சுற்றுலாவாசிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். அதிக அளவில் வீசும் மணல் புயலால் கெனரி தீவானது செந்நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சி அளிக்கின்றது.
மணல் புயலின் தாக்கத்தால் அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் சொந்த இருப்பிடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.