ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு..!!! தேசிய வானிலை ஆய்வுமையம் தகவல்..!!!

Published: 22 Mar 2020, 5:05 AM |
Updated: 22 Mar 2020, 9:14 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடனும், புயலை போன்று அதிவேகத்தில் காற்றும் வீசி வருகிறது. இந்த வானிலை ஞாயிற்றுக்கிழமையும் (இன்று) தொடரும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (National Center of Meteorology) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சனிக்கிழமை இரவு முதல் ஆரம்பிக்கும் இந்த வானிலையானது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மின்னலுடன் இந்த மழை இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சனிக்கிழமையன்று, துபாயில் இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அமீரகத்தின் மற்ற பகுதிகளான அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது.

இன்று முழுவதும் வானிலை நிலையற்றதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் NCM இன்று பொதுமக்களுக்கு மஞ்சள்-ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டு மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொது கவனத்துடன் இருக்குமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்று பெரும்பாலான நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெப்பநிலை 25°C முதல் 32°C வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.