ADVERTISEMENT

துபாயில் நடைபெற இருந்த “துபாய் உலகக்கோப்பை 2020” போட்டி நிறுத்தம்..!!! கொரோனா எதிரொலி…!!!

Published: 22 Mar 2020, 1:45 PM |
Updated: 22 Mar 2020, 1:55 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாத இறுதியில் நடக்கவிருந்த துபாய் உலகக் கோப்பை 2020 தற்பொழுது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து துபாய் ஊடக அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பங்கேற்பாளர்கள் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, துபாய் உலகக் கோப்பை 2020 இன் உயர் அமைப்புக் குழு உலகளாவிய போட்டியின் 25 வது பதிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது” என்று  தெரிவித்துள்ளது.


முன்னதாக, கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள மைடானில் (Meydan) நடக்க இருந்த துபாய் உலகக் கோப்பை-2020 பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், மார்ச் மாதம் 28 ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த உலககோப்பையானது தற்பொழுது அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT