ADVERTISEMENT

துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தம்..!!! மார்ச் 25 முதல் அமல்..!!!

Published: 22 Mar 2020, 2:58 PM |
Updated: 22 Mar 2020, 3:05 PM |
Posted By: jesmi

சர்வதேச விமானப்போக்குவரத்தில் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 25 ம் தேதி முதல் தனது அனைத்து விமானசேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டும் பல நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளும் விதித்தும் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்நிறுவனமானது தொடர்ந்து சரக்கு விமானங்களை இயக்கும்.

“சர்வதேச விமான நிறுவனமாகிய நாங்கள், நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் வரை, பயணக்கட்டுப்பாடுகளை திரும்பப் பெறும் வரை பயணிகள் விமானசேவைகளை இயக்கிச் செல்ல முடியாத சூழ்நிலையில் நாங்கள் காணப்படுகிறோம் ” என்று எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறினார்

ADVERTISEMENT


மேலும், அந்நிறுவனத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக, பெரும்பான்மையான எமிரேட்ஸ் குழும ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை (Basic Salary) தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு குறைக்க விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறைப்பு வீதம் 25 முதல் 50 சதவீதம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் (Emirates) மற்றும் டனாடாவின் (Dnata) ப்ரெசிடென்ட்களான – சர் டிம் கிளார்க் மற்றும் கேரி சாப்மேன் ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு அடிப்படை சம்பளத்திலிருந்து 100 சதவீதமும் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

இந்த நேரத்தில் ஊழியர்களுக்கு அவர்களின் பிற அலவென்ஸ்கள் (allowances) தொடர்ந்து வழங்கப்படும் என்றும், இளைய நிலை ஊழியர்களுக்கு (Junior level employees) அடிப்படை சம்பளக் குறைப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.