ADVERTISEMENT

UAE : வெறும் 5 நிமிடத்தில் கொரோனா வைரஸ் டெஸ்ட்…!!! SEHA அசத்தல்…!!!

Published: 29 Mar 2020, 5:42 AM |
Updated: 29 Mar 2020, 9:02 AM |
Posted By: jesmi

உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் போதிய அளவு வசதி இல்லாமல் அனைத்து நாடுகளும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு ஹோட்டல்கள், விளையாட்டு திடல்கள் போன்றவற்றை தற்காலிகமாக மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களாக மாற்றி வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தலைநகரான அபுதாபியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக புதிதாக மொபைல் டெஸ்ட் சென்டர் “Mobile Test Center” தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA) உருவாக்கிய இந்த புதிய கொரோனா வைரசிற்கான மொபைல் பரிசோதனை மையமானது, அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள இந்த பரிசோதனை மையத்தில் கொரோனா வைரசிற்கான பரிசோதனை வெறும் ஐந்து நிமிடங்களிலேயே மேற்கொண்டு விடலாம். அதே நேரத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 600 பேருக்கு இந்த மையம் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் முறைகளில் ஒன்றாக, தனி நபர்களுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்வதற்கு இந்த மொபைல் பரிசோதனை மையம் “Mobile Test Center” பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

கொரோனா வைரசிற்கான மொபைல் பரிசோதனை மையத்தை “Mobile Test Center” பார்வையிட்ட மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக SEHA அமைத்த மொபைல் கோவிட் -19 சோதனை மையத்தைப் பார்வையிட்டேன். இந்த துறையில் உள்ள மருத்துவ குழுக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களை பாதுகாப்பதில் முதன்மையாக இருக்கிறார்கள், அவர்களின் தியாகங்கள் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன” என்றும் கூறியுள்ளார். இந்த மையத்தின் திறப்பு விழாவில் அபுதாபி நிர்வாக சபை உறுப்பினரும் அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

அப்பாய்ண்ட்மெண்ட் புக் செய்யும் முறை:

இந்த மொபைல் பரிசோதனை மையத்தின் மூலமாக பரிசோதனை செய்ய விரும்புவோர் எஸ்டிஜாபா சேவை மையத்தின் மூலமாக 8001717 என்ற இந்த நம்பரை தொடர்புகொண்டு அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுக்கொண்டவர்கள் மதிப்பீட்டிற்கு முந்தைய ஸ்க்ரீனிங் செய்வதற்கு கேட்டுக்கொள்ளப்படுவார்கள். அங்கு அவர்களின் உடல் நிலை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

முன் பரிசோதனையைத் தொடர்ந்து, வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், இந்த நபர்களுக்கு இங்கு கொரோனா வைரஸிற்கான சோதனை இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சந்தேகத்தின் பேரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள விரும்புவோரும் இந்த மையத்தின் மூலமாக பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் இதற்கான கட்டணமாக 370 திர்ஹம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொபைல் பரிசோதனை மையம் அமைந்துள்ள இடம் மற்றும் நேரங்கள்:

இடம்: சயீத் விளையாட்டு நகரம் (Zated Sports City)
நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை. சோதனை செய்ய சுமார் 5 நிமிடங்கள் எடுக்கும்.
திறன்: தினமும் 600 பேருக்கு சேவை செய்ய முடியும்.