ADVERTISEMENT

அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறைப்பு..!!!

Published: 30 Mar 2020, 8:06 AM |
Updated: 30 Mar 2020, 8:06 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சூப்பர் 98 பெட்ரோல் இனிமேல் லிட்டருக்கு 1.91 திர்ஹம் விலைக்கு விற்கப்படும் என்றும் ஸ்பெஷல் 95 லிட்டருக்கு 1.80 திர்ஹம் மற்றும் டீசல் லிட்டருக்கு 2.06 திர்ஹம் வரை விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்த காலாண்டில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன. சூப்பர் 98 பெட்ரோல் இந்த ஆண்டின் பிப்ரவரியில் லிட்டருக்கு 2.24 திர்ஹமாக இருந்தது, மேலும் 2020 மார்ச் மாதத்தில் லிட்டருக்கு 2.16 திர்ஹமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதேபோல், ஸ்பெஷல் 95 பிப்ரவரி மாதத்தில் 2.12 திர்ஹமில் இருந்து 2020 மார்ச் மாதத்தில் லிட்டருக்கு 2.04 திர்ஹமாகக் குறைந்தது.

2020 பிப்ரவரியில் லிட்டருக்கு 2.40 திர்ஹம் ஆக இருந்த டீசல் விலை மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.25 திர்ஹம் ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறைக்கப்பட்டது அமீரக வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

ADVERTISEMENT