ADVERTISEMENT

அமீரகத்தில் விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாவில் இருப்பவர்களின் விசா காலம் முடிவடைந்தால் கவலை வேண்டாம்..!!! சட்டபூர்வமாக தங்க ICA நடவடிக்கை…!!!

Published: 24 Mar 2020, 4:29 AM |
Updated: 24 Mar 2020, 4:29 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது மற்ற உலக நாடுகளுடனான வான் போக்குவரத்து மற்றும் சாலை மார்க்கமாக செல்ல கூடிய எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து விசா காலம் முடிவடைந்த சுற்றுலாவாசிகள் அனைவரும் மேற்கொண்டு தங்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (Federal Authority for Identity and Citizenship, ICA) தெரிவித்துள்ளது. அதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறை வரும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ICA ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.”ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச அளவில் எடுக்கப்படும் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி நடக்க தயாராக உள்ளது,” என்று தெரிவித்துள்ளது.