ADVERTISEMENT

அமீரகத்தில் புதிய தொழிலாளர்களை பணியமர்த்த வழங்கப்படும் தொழிலாளர் அனுமதி (Work Permit) தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!!

Published: 19 Mar 2020, 5:33 AM |
Updated: 19 Mar 2020, 5:39 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில், மார்ச் 19 வியாழக்கிழமை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஓட்டுநர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட அனைத்து வகையான தொழிலாளர் அனுமதி (labour permit) வழங்குவதையும் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (The Ministry of Human Resources and Emiratisation) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த உத்தரவு எக்ஸ்போ 2020 தொழிலாளர்கள் மற்றும் உள்-நிறுவன இடமாற்றங்களுக்கான (intra-corporate transfers) வேலை அனுமதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கிறது.

அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய அதிகாரசபையுடன் ஒருங்கிணைந்து வளர்ந்து வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கும் அதன் பரவலைத் தடுப்பதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT