ADVERTISEMENT

அல் அய்னில் வாகன விபத்து : மூன்று தமிழர்கள் உயிரிழப்பு!!

Published: 1 Mar 2020, 10:14 AM |
Updated: 1 Mar 2020, 10:14 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள, அல் அய்னில் கார் மோதியதில் மூன்று இந்தியர்கள் இறந்துள்ளனர். இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இறந்தவர்களின் விபரங்களைக் கூறியுள்ளார். அவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இறந்தவர்கள் ராம்குமார் குணசேகரன் (வயது 30 ), சுபாஷ் குமார் (வயது 29 ), மற்றும் செந்தில் காளியப்பெருமாள் (வயது 36 ) ஆகிய மூவர் எனத்தெரிய வந்துள்ளது. இவர்கள் அபுதாபியில் இருக்கும் முஸாபாவில்(Mussaffa) உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

அல் அய்ன் நகரைச் சேர்ந்த சமூக சேவகர் சமது பொம்தனம் கூறியதாவது: “இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்தது. அவர்கள் சென்ற வாகனம் அவர்களுக்கு முன்னால் சென்ற வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குணசேகரன் என்கிற ஒருவர் மட்டும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று கூறினார்.

மேலும், இது பற்றிக் கூறுகையில், மூவரும் அல் அய்ன் வழியே ஓமனுக்குச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அங்கு செல்ல முடியாமல் எல்லையில் இருந்து திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில் அவர்களில் ஒருவர் தனது தொழில் காரணமாக ஓமன் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. அதனால் அவர்கள் எல்லையிலிருந்து திரும்பியுள்ளனர். வரும் வழியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்று பொம்தனம் கூறினார்.

ADVERTISEMENT

மேலும் அவர் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அனைத்து சம்பிரதாயங்களை முடித்து வருவதாகவும், மூன்று பேரின் உடல்களையும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.