ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 12, 2020) : பாதிக்கப்பட்டோர் 387 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 4,123 பேர்..!!! இரண்டு பேர் பலி..!!

Published: 12 Apr 2020, 6:42 PM |
Updated: 12 Apr 2020, 7:00 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12, 2020) புதிதாக 387 தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இன்று மட்டும் புதிதாக இரண்டு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் இருவரும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT