ADVERTISEMENT

கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார இழப்பு..!!! British Airways 36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்ய வாய்ப்பு..!!!

Published: 2 Apr 2020, 9:57 AM |
Updated: 2 Apr 2020, 10:02 AM |
Posted By: jesmi

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகளவில் பல இலட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக் கணக்கானோர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தும் உள்ளனர். அது மட்டுமின்றி, இந்த கொரோனாவால் உலகப் பொருளாதாரமே கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பால் பல பேர் தங்கள் வேலைகளை இழந்தும், வேலை செய்வதற்கு கூட வெளியில் வர இயலாமலும் பெரும் அவதிப்படுகின்றனர். உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டுள்ளதால் அதை ஈடு கட்டுவதற்கு தங்கள் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தும் அல்லது ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியும் சமாளித்துக் கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், கொரோனா வைரஸின் பாதிப்பை தொடர்ந்து, உலகளவில் புகழ்பெற்ற விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (Bristish Airways) தங்கள் நிறுவனத்தின் கேபின் குழுவினர் முதல் பொறியாளர்கள், தலைமை அலுவலக ஊழியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள 36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார தொடக்கத்தில் கேட்விக் விமான நிலையத்தில் (Gatwick Airport) தனது விமானங்களை தரையிறக்கிய பிரிட்டிஷ் விமான நிறுவனம், ஒரு வாரத்திற்கும் மேலாக யுனைட் யூனியனுடன் (Unite Union) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. British Airways-ன் கேபின் குழுவினர், கடைநிலை ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் 80 சதவீதத்தினரின் வேலைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் ஒப்பந்தம் ஒன்றை யுனைட் யூனியனுடன் இந்த விமான நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிடுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் எந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் தொடர்பான தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் செவ்வாயன்று பிரிட்டனின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.