ADVERTISEMENT

கொரோனாவிற்காக மிகப்பெரும் கள மருத்துவமனையாக மாற்றப்படும் துபாய் உலக வர்த்தக மையம்..!!

Published: 15 Apr 2020, 5:26 AM |
Updated: 15 Apr 2020, 5:30 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை தொடர்ந்து அவர்களுக்கென பிரத்யேகமாக சிகிச்சை அளிப்பதற்காக துபாய் உலக வர்த்தக மையமானது (Dubai World Trade Center) கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய மிகப்பெரும் கள மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக வர்த்தக மையம் 3,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நோயாளிகளின் வருகையை சமாளிக்கும் விதமாக செவிலியர்களும் மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், எந்தவொரு அவசர சூழ்நிலையையும் சமாளிக்க அமீரகம் தயாராக இருப்பதாகவும் துபாயின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் (Director-General of the Dubai Health Authority) ஹுமைட் அல் குதாமி (Humaid Al Qutami) கடந்த வாரம் தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்ட செய்தியில், துபாயில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைக்காக இரண்டு கள மருத்துவமனைகளை அமைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

ADVERTISEMENT

அவர் கூறுகையில், “எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் விதமாக வரும் நாட்களில் துபாயில் இரண்டுக்கும் மேற்பட்ட கள மருத்துவமனைகள் தயாராக இருக்கும்” என்றும் அல் குதாமி கூறினார்.

துபாயில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 4,000 முதல் 5,000 படுக்கைகள் உள்ளதாகவும், மேலும், 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகளை கையாளுவதற்கு அதிகாரிகள் தற்பொழுது தயார்படுத்திக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

 

 

source : Khaleej Times