ADVERTISEMENT

வணிக நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!!! தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்..!! ADDED அறிவிப்பு..!!

Published: 28 Apr 2020, 7:55 AM |
Updated: 28 Apr 2020, 7:55 AM |
Posted By: jesmi

அபுதாபியில் வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கொரோனா வைரசிற்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறையால் (Abu Dhabi Department of Economic Development,ADDED) திங்களன்று வெளியிடப்பட்ட உத்தரவுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ADDED வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், கொரோனாவிற்கான பரிசோதனைக்கு “தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள” தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது பற்றிக்கூறுகையில், சில நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவதில் அலட்சியமாக இருக்கின்றனர் என்று ADDED இன் துணை செயலாளர் ரஷீத் அப்துல் கரீம் அல் பலூஷி கூறினார். அவ்வாறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேற்கூறியுள்ளதன் படி, தங்கள் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை நடவடிக்கைக்கு இணங்காத நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரசபை எச்சரித்துள்ளது. மீண்டும் அதே தவறை செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்றும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்விதிகளை மீறுபவர்களுக்கு இந்த குற்றத்திற்காக அவசர மற்றும் நெருக்கடி வழக்கு விசாரணைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு இணங்காத நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு மூடப்பட வாய்ப்பிருப்பதாகவும் அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூடவே, வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறை வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா பரவுவதைத் தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் தங்கும் விடுதிகளில் உள்ள தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஸ்க்ரீன் செய்யப்படுகிறார்கள். மேலும், தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட தங்குமிடங்களில் தொழிலாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கிறார்களா என்பதையும் முதலாளிகள் உறுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

source : Khaleej Times