ADVERTISEMENT

அமீரகத்தில் பாஸ்போர்ட், அட்டெஸ்டேஷன் சேவைகள் மீண்டும் தொடக்கம்..!! இந்திய துணை தூதரகம் அறிவிப்பு..!!

Published: 26 Apr 2020, 11:04 AM |
Updated: 26 Apr 2020, 11:47 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் காலாவதியான பாஸ்போர்ட் மற்றும் சர்டிபிகேட் அட்டெஸ்டேஷன் சேவைகளை வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் குறிப்பிட்ட மையங்களை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முழு நேர ஊரடங்கிலிருந்து குறிப்பிட்ட நிறுவனங்கள் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கும் சமீபத்திய அரசாங்க அறிவிப்புகளுக்கு இணங்க, ஷார்ஜா மெயின் சென்டர், துபாயில் அல் கலீஜ் சென்டர், தேராவில் உள்ள BLS சென்டர், புஜைராவில் உள்ள இந்தியன் சோசியல் கிளப் மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள BLS சென்டர் ஆகிய ஐந்து மையங்கள் தற்போது இந்திய குடிமக்களின் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளதாக இந்திய துணை தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், ஏற்கனவே காலாவதியான அல்லது இந்த ஆண்டு மே 31 ஆம் தேதிக்குள் காலாவதியாகும் பாஸ்போர்ட்டுகள் மட்டுமே தற்போது புதுப்பிக்க ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு முன்பதிவு செய்து கொள்வதன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாஸ்போர்ட் மற்றும் அட்டெஸ்டேஷன் சேவைக்கான BLS சென்டர்களில் முன்பதிவு செய்து கொள்ள info@blsindiavisa-uae.com என்ற முகவரியில் பாஸ்போர்ட் சேவைக்கும் ivsglobaldxb@gmail.com என்ற முகவரியில் அட்டெஸ்டேஷன் சேவைக்கும் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும் துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அவரச தேவைக்காக விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டின் நகலையும், அவசர நிலையை விளக்கும் மனுவையும் இணைத்து passport.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம் எனவும் சரியான துணை ஆவணங்கள் அல்லது விளக்கம் இல்லாத கோரிக்கைகளுக்கு இந்திய துணை தூதரகம் பதில் அளிக்காது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT