ADVERTISEMENT

கொரோனாவின் தாக்கத்தையொட்டி குவைத் நாட்டில் வசிப்பவர்களின் காலாவதியான விசா நீட்டிப்பு..!!!

Published: 16 Apr 2020, 1:36 PM |
Updated: 16 Apr 2020, 1:40 PM |
Posted By: jesmi

குவைத் நாட்டில் காலாவதியான விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் மே 31 வரை மூன்று மாத காலத்திற்கு விசா நீட்டிப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. குவைத் நாட்டின் துணை பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் அனஸ் அல் சாலிஹ் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, குவைத் நாட்டில் இருப்பவர்களின் காலாவதியான அனைத்து விசாக்களும் மார்ச் 1 2020 ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மார்ச் 1 முதல் காலாவதியாகும் விசாவை உடையவர்களுக்கு மே 31 ம் தேதி வரை விசாவானது நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

இந்த விசா நீட்டிப்பானது தற்பொழுது குவைத் நாட்டிற்குள் இருக்கும் காலாவதியான விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளில் தங்கள் நாடுகளில் இருக்கும் வெளிநாட்டவர்களை ஆதரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT