ADVERTISEMENT

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 462 நிறுவனங்களை மூட உத்தரவு..!!! குவைத் முனிசிபாலிடி அதிரடி.!!!

Published: 2 Apr 2020, 6:07 PM |
Updated: 2 Apr 2020, 6:07 PM |
Posted By: jesmi

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது வரை அந்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்கவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார ஆணையத்தால் கூறப்பட்ட கொரோனா வைரசிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் விதிகளை மீறியதற்காக அந்நாட்டில் உள்ள 462 நிறுவனங்களை குவைத் முனிசிபாலிடி மூட உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்நாட்டின் முனிசிபல் அஃபைர்ஸின் அமைச்சரான (minister of state for municipal affairs) வலீத் அல் ஜாஸ்ஸம் அவர்கள் ட்விட்டரில் தெரிவித்த செய்தியில், முனிசிபாலிடி குழுவானது சுகாதாரத் துறை அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக கடைகள், ரெஸ்டாரண்ட், ஜிம், திருமண மண்டபங்கள் போன்றவற்றை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.