ADVERTISEMENT

அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு தனியார் துறைகளுக்கான வேலை நேரம் மாற்றியமைப்பு..!!!

Published: 25 Apr 2020, 5:54 AM |
Updated: 25 Apr 2020, 5:56 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அமீரகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரமானது குறைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதே போல், இந்த வருடமும் அமீரகத்தில் உள்ள அரசு சார்ந்த வேலை செய்யும் ஊழியர்களுக்கு வேலை நேரம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் ரமலானை முன்னிட்டு வழக்கமான வேலை நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், கொரோனவை முன்னிட்டு துபாயில் அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களில் அதிகபட்சம் 30% பேர் தங்கள் அலுவலகங்களிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT