ADVERTISEMENT

KSA : காலாவதியான Entry and Exit விசா மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு..!!! சவூதி அரசாங்கம் அறிவிப்பு..!!!

Published: 9 Apr 2020, 6:35 AM |
Updated: 9 Apr 2020, 6:50 AM |
Posted By: jesmi

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு, பொது போக்குவரத்து நிறுத்தம், தனியார் துறை சார்ந்த தொழில்கள் தற்காலிக நிறுத்தம், சவூதி அரேபியாவில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை போன்ற பல்வேறு திட்டங்கள் அந்நாட்டு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சமீபத்தில் சவூதி மன்னர் சல்மான் அவர்கள் சவூதி அரேபியாவில் தற்சமயம் காலாவதியாகி இருக்கும் வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டையானது (Iqama), கட்டணம் ஏதும் இல்லாமல் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இது அந்த அடையாள அட்டை (Iqama) வைத்திருக்கும் தற்போது அந்நாட்டில் உள்ளவர்களுக்கும் மற்றும் சவூதி அரேபியாவை விட்டு வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக தற்பொழுது சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் (General Directorate of Passports) Entry and Exit விசாக்களில் காலாவதியாகும் விசாக்களின் வேலிடிட்டியை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது பிப்ரவரி 25,2020 முதல் மே 24,2020 வரை காலாவதியாகும் விசாக்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த இடைப்பட்ட காலங்களில் விசா காலாவதியாகி இருந்தால் அவருக்கு அபராதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து, காலாவதியாகி இருக்கும் வெளிநாட்டவர்களின் இந்த விசாவானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நாட்டின் வணிக மற்றும் தொழில்துறையில் வேலை பார்க்கும் குடியிருப்பாளர்களுக்கும் மற்றும் தற்போது நாட்டில் உள்நுழையவும் மற்றும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்ட காலங்களில் இந்த விசாவினை பயன்படுத்தாதவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் கூறுகையில், காலாவதியாகும் விசா வைத்திருப்பவர்களின் பாஸ்போர்ட்டை மதிப்பீடு செய்யாமலேயே தானாகவே அவர்களின் விசாகாலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவோ அல்லது அலுவலகத்தை தொடர்பு கொள்ளவோ அவசியம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த சேவையை சரிபார்க்க “Absher” என்ற தளத்தில் சென்று தங்களுடைய விபரங்களை செலுத்தி தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.