ADVERTISEMENT

நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ரமலான் வாழ்த்து கூறிய அமீரக தலைவர்கள்..!!!

Published: 24 Apr 2020, 10:05 AM |
Updated: 24 Apr 2020, 10:05 AM |
Posted By: jesmi

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்று தொடங்கியதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் நாட்டு குடிமக்களுக்கும், மற்ற அரபு நாடுகளுக்கும் மற்றும் உலக முஸ்லீம் நாடுகளுக்கும் தங்களின் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மன்னர்கள், எமீர் மற்றும் தலைவர்களுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளார். தலைவர்கள், மக்கள் நல்ல ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தொடரவும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்படையவும் வாழ்த்துக்களை கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் அதிபருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறியதாவது, ” ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பாக, உலகம் முழுவதும் ஆசீர்வதிக்கப்பட்ட ரமலானை பெற வாழ்த்துகிறேன். இது நமக்கு நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும், அமைதியையும் தரட்டும். ஒன்றாக, நாம் நமது உலகத்தை சிறப்பாக நோக்கி அழைத்துச் செல்வோம்” என்றார்.

ADVERTISEMENT

அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் கூறியுள்ள வாழ்த்து செய்தியில் “அனைவருக்கும் ரமலான் முபாரக். இரக்கமும் ஒற்றுமையும் கொண்ட இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதத்தில் அமைதியையும் உத்வேகத்தையும் பெற்று, நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாக இருக்கவும். வரவிருக்கும் பிரகாசமான நாட்களை நாம் காண்பதற்கு நமக்கு வலிமையும் ஒற்றுமையும் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT