ADVERTISEMENT

உலகளவில் கொரோனாவை எதிர்த்து போராட சவூதி அரேபியா 500 மில்லியன் டாலர் நன்கொடை..!!! WHO-வின் இயக்குனர் ஜெனரல் நன்றி தெரிவிப்பு..!!

Published: 18 Apr 2020, 9:39 AM |
Updated: 18 Apr 2020, 10:28 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவாக 500 மில்லியன் டாலர் நன்கொடை அளித்ததற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான SPA வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

“கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, 500 மில்லியன் டாலர் நன்கொடை அளித்ததற்கு சவூதி மன்னர் சல்மான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள ஜி-20 குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் மற்ற நாடுகளும் (G-20 Countries) சவூதியை போல் கொரோனாவிற்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனெரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (WHO’s Director-General Dr. Tedros Adhanom Ghebreyesus) கூறியுள்ளார்.

இதில் சவூதி அரசு தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணிக்கு 150 மில்லியன் டாலர்களையும், தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான உலகளாவிய கூட்டணிக்கு 150 மில்லியன் டாலர்களையும், சர்வதேச மற்றும் பிற பிராந்தியத்தின் சுகாதார நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு 200 மில்லியன் டாலர்களையும் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரையிலும், கொரோனா வைரஸினால் உலகளவில் 1,50,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் மற்றும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT