ADVERTISEMENT

அபுதாபியில் சுத்திகரிப்பு நேரங்களில் வெளியே செல்வதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்..!! அபுதாபி காவல்துறை அறிவிப்பு..!!

Published: 11 May 2020, 6:54 AM |
Updated: 11 May 2020, 6:59 AM |
Posted By: jesmi

அபுதாபியில் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும் நேரங்களான இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் குயிருப்பாளர்கள் இயக்க அனுமதி பெற வேண்டும் (movement permits) என அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுத்திகரிப்பு நடைபெறும் காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் கட்டாயம் இயக்க அனுமதி பெற வேண்டும் எனவும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை, மருந்தகம் அல்லது அடிப்படைத் தேவைகளை வாங்குவது போன்ற அவசர காரணங்களுக்காக அனுமதி இல்லாமல் சுத்திகரிப்பு நேரங்களில் வெளியே செல்லும் குடியிருப்பாளர்கள், அவர்கள் வெளியேறியதற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுத்திகரிப்பு காலங்களில் பணிபுரியும் ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள், அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவிற்கு (Abu Dhabi Emergency Crisis and Disasters committee) ஊழியர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வாகன எண்களின் விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், முக்கிய துறைகளில் பணிபுரிபவர்களின் வாகனங்களுக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது பொது வழக்கு விசாரணையில் புகார் அளிக்க விரும்புவோர், pp.gov.ae என்ற வலைத்தளத்தின் மூலம் விதிமீறல்கள் நடந்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருப்பவர்கள் சுத்திகரிப்பு நடைபெறும் நேரங்களில் வெளியே செல்ல adpolice.gov.ae என்ற இணையதளத்தின் மூலம் இயக்க அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.