ADVERTISEMENT

அமீரகத்தில் பொதுத்துறைகளுக்கான Eid Al Fitr விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!

Published: 11 May 2020, 9:14 AM |
Updated: 11 May 2020, 9:17 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் (Federal Authority for Government Human Resources in the UAE) திங்களன்று பொதுத்துறை ஊழியர்களுக்கு நோன்பு பெருநாளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரையிலான இடைப்பட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், சரியான தேதிகள் பிறை பார்ப்பதன் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் கடந்த வருடம் 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் அமீரகத்தில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு ஒரே மாதிரியான விடுமுறைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், தனியார் துறை ஊழியர்களுக்கு தனி அறிவிப்பு வெயிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதன்படி, மே மாதம் 22 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை வரையிலான 5 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநாளுக்கான பொது விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT