ADVERTISEMENT

கொரோனா எதிரொலி : கத்தாரில் அனைத்து கடைகள், வணிக நடவடிக்கைகளை மூட உத்தரவு..!!

Published: 19 May 2020, 10:39 AM |
Updated: 19 May 2020, 10:40 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பரவலையொட்டி அதனை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டின் அரசாங்கம் மே 19 (இன்று) முதல் மே 30 வரை அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது. இதன் படி, அனைத்து கடைகளும் இம்மாத இறுதி வரையிலும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசாங்கம் அறிவித்த இந்த முடிவில் உணவு விநியோகக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் ஹோம் டெலிவரி போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் ஏற்கெனவே மால்கள் மற்றும் டைன்-இன் உணவகங்கள் போன்றவை கொரோனா வைரஸ் பரவலையொட்டி மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார் நாட்டின் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிற நடவடிக்கைகளில், அனைத்து குடிமக்களும் குடியிருப்பாளர்களும் Ehtiraz என்ற மொபைல் அப்ளிகேஷனை தங்களின் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டை விட்டு வெளியே செல்லும் நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது மே 22 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்நாட்டில் இரண்டு பேருக்கு மேல் ஒரு காரில் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் பொது இடங்களில் உடற்பயிற்சி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT