ADVERTISEMENT

நாளை முதல் முக கவசம் இன்றி வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை..!! கத்தார் அரசு அறிவிப்பு..!!

Published: 15 May 2020, 1:43 PM |
Updated: 16 May 2020, 4:18 PM |
Posted By: jesmi

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 55,000 அமெரிக்க டாலர் (200,000 கத்தார் ரியால்கள்) அபராதம் விதிக்கப்படும் என்றும் கத்தார் நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்து கத்தார் நாட்டின் செய்தி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும் நபர்களில் தனி ஒருவராக வாகனம் ஓட்டுபவர் தவிர அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இந்த விதியை மீறுபவர் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 200,000 கத்தார் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 17,2020) முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் இதுவரை 29,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT